தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர்!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவனைகளின் தரம் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் வந்துகொண்டிருந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

By

Published : May 28, 2020, 2:48 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் தரமற்று இருப்பதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

இதனைத்தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வுமேற்கொண்டார். அங்குள்ள மருத்துவர்கள், ஊழியர்களிடம் கரோனா நோயாளிகள் உள்பட பிற நோயாளிகளுக்கும் தரமான மருத்துவம் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்தார். மேலும், தலைநகர் லக்னோவில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இருக்கின்றனவா என்றும் கேட்டறிந்தார்.

மருத்துவமனையின் சுகாதாரம் குறித்து ஆய்வுமேற்கொண்ட முதலமைச்சர், அவசர சிகிச்சைப் பிரிவு, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட மையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

உயர்மட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துறை சார்ந்த அமைச்சர்கள் தங்களது பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வுமேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் அங்குமிங்கும் செல்வதையும், பொதுமக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பதையும் பார்த்த முதலமைச்சர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: ’இவன் இன்னும் உயிரோட இருக்கானா?’ - இறந்தவர் சுவாசித்ததால் வந்த குழப்பம்!

ABOUT THE AUTHOR

...view details