தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பசுக்களுக்கு சலுகை - உ.பி., முதலமைச்சர் அதிரடி திட்டம் - சிறப்புத் திட்டங்கள்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மாடுகளுக்குத் தீவனம் வழங்க அரசு சார்பில் தினம்தோறும் 30 ரூபாய் வழங்கப்படும் என, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பசு பாதுகாப்பு குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

உபி முதலமைச்சர்

By

Published : Jul 9, 2019, 12:53 PM IST

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ’கெள சேவா ஆயோக்’ (பசு நல அறக்கட்டளை) அதிகாரிகள், கால்நடை வளர்ப்புத்துறை அதிகாரிகள் ஆகியோரும் பசுக்களை பாதுகாப்பதற்கான சிறப்புத் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், சேவா ஆயோக் தலைவரும், கால்நடை வளர்ப்புத்துறை அதிகாரிகளும் சீரான இடைவெளியில் அனைத்து மாவட்டங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு, பசுக்களுக்கு முறையாக மாட்டுக் கொட்டைகள் கட்டப்பட்டுள்ளனவா, அதற்கு தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டம் வாரியாக ஆய்வு மேற்கொள்ளும்போது, மாவட்ட கால்நடை அதிகாரியும் உடனிருக்க வேண்டும் என்று கூறினர்.

மேலும், மாடுகளுக்குத் தீவனம் அளிக்க 30 ரூபாய் அரசு சார்பில் தினமும் வழங்கப்படும். சோதனை முயற்சியாக இத்திட்டம் பண்டெல்கண்ட் பகுதியில் அமல்படுத்தப்படும் என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details