எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய சுகாதார மூத்த மேற்பார்வையாளர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ஆதர்ஷ் பிரதாப் சிங் கூறுகையில், “இவர் (சுகாதார மூத்த மேற்பார்வையாளர்) சுகாதார நடவடிக்கைகளில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார். அவரைச் சந்திக்கும் முன்பும், பின்பும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துவார்.
கைகளில் எப்போதும் சானிடைசர் பாட்டில்களை வைத்திருப்பார். இவர் எய்ம்ஸ் வளாகத்தில் அனைவரும் விரும்பப்பட்ட நபர். பட்டியலின, பழங்குடியினரின் நல உதவி வாரியத்தில் முக்கியப் பங்காற்றினார்” என்றார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் ஊழியர்களின் பாதுகாப்புக்காகத் தொடர்ச்சியான வெப்ப திரையிடல் சோதனைகளையும், சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்டவற்றையும் நிர்வாகம் வழங்க வேண்டும் என ஊழியர்களின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Read:கோவிட்-19: இளைஞர்களை பயிற்றுவிக்கும் சர்வதேச அமைப்புகள்