தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மார்ச் 18 முதல் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பும் யெஸ் வங்கி சேவை! - yes bank lastest news

டெல்லி: கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி புதன்கிழமை முதல் மீண்டும் முழுவீச்சில் திரும்பும் என அவ்வங்கி அறிவித்துள்ளது.

yes bank
yes bank

By

Published : Mar 16, 2020, 2:13 PM IST

வாராக்கடன், நிர்வாகச் சிக்கல்களுக்கு இரையாகி கடந்த சில மாதங்களாகப் பெரும் சரிவைச் சந்தித்துவந்த யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தனது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது.

மேலும், ஏப்ரல் 3ஆம் தேவி வரை யெஸ் வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதி அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. இது அவ்வங்கி வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நீண்டகாலமாக முடங்கிக்கிடக்கும் யெஸ் வங்கி மீண்டும் அதன் இயல்பான செயல்பாட்டுக்குத் திரும்பவுள்ளதாக அவ்வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள யெஸ் வங்கி, "மார்ச் 18ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் நாங்கள் முழுவீச்சில் செயல்படவுள்ளோம்.

இதையடுத்து, மார்ச் 19ஆம் தேதி முதல் எங்களது ஆயிரத்து 132 கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் அணுகலாம். டிஜிட்டல் சேவைகளையும் பயன்படுத்தலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :ஜிஎஸ்டி புதிய வரி விதிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்!

ABOUT THE AUTHOR

...view details