தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யெஸ் வங்கி மோசடி வழக்கு : அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் - அனில் அம்பானி யெஸ் வங்கி

டெல்லி : யெஸ் வங்கி நிறுவனர் ரானா கப்பூருக்கு எதிரான பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகும்படி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

yes bank
yes bank

By

Published : Mar 16, 2020, 3:11 PM IST

Updated : Mar 16, 2020, 4:02 PM IST

வாராக்கடன், நிர்வாகச் சிக்கல்களுக்கு இரையாகி கடந்த சில மாதங்களாக பெரும் சரிவைச் சந்தித்து வந்த யெஸ் வங்கி, இம்மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இதையடுத்து, ஏப்ரல் 3ஆம் தேதி வரை யெஸ் வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கமுடியும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இதனிடையே, ஸெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கப்பூருக்கு எதிராக பண மோசடி வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறையினர், ராணா கப்பூரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும் படி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

யெஸ் வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செல்லுத்தாத நிறுவனங்களுள் அனில் அம்பானியின் நிறுவனமும் உள்ளதால், மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரக அலுவகத்தில் இன்று ஆஜராகும் படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர். யெஸ் வங்கியில் இருந்து ரிலையன்ஸ் குழுமம் 12 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவை தற்போது வாராக்கடனாக மாறியுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மார்ச் 6ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிலையன்ஸ் குழுமம், எஸ்செல், ஐஎல்எஃப்எஸ், டிஎச்எஃப்எல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் யெஸ் வங்கியிடமிருந்து கடன் வாங்கி விட்டு திரும்பி செல்லுத்தவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க : மார்ச் 18 முதல் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பும் யெஸ் வங்கி சேவை!

Last Updated : Mar 16, 2020, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details