தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்னும் சற்று நேரத்தில் தாக்கலாகிறது கர்நாடக பட்ஜெட்! - எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா இன்னும் சற்று நேரத்தில் தாக்கல்செய்யவுள்ளார்.

Yediyurappa
Yediyurappa

By

Published : Mar 5, 2020, 10:47 AM IST

குமாரசாமி - காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்தாண்டு ஜூலை 23ஆம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து ஜூலை 26ஆம் தேதி எடியூரப்பா முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், 2020-21ஆம் நிதியாண்டிற்கான கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதித் துறையை தன்வசம் வைத்துள்ள அம்மாநில முதலமைச்சர் கர்நாடக சட்டப்பேரவையில் தற்போது தாக்கல்செய்கிறார்.

எடியூரப்பா ஏழாவது முறையாக கர்நாடகாவின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்கிறார். அதேபோல முதலமைச்சராக எடியூரப்பா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது இது ஐந்தாவது முறையாகும்.

இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயம், நீர்ப்பாசனம், உள்கட்டமைப்பு, எரிசக்தி, கல்வி, சுகாதாரம், பெங்களூருவின் வளர்ச்சி உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ‘கொரோனாவை தடுக்க மாஸ்க் தேவையில்லை, நமஸ்காரம்தான் தேவை’ - பிரகாஷ் ஜவடேகர்

ABOUT THE AUTHOR

...view details