கோவிட்-19 வைரஸ் தொற்றின் இந்தியாவில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் தற்போதுவரை 1,637 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக பிரதமரின் உத்தரவின்படி ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
இந்தியா தற்போது சந்தித்துவரும் பெரும் நெருக்கடி நிலையை சமாளிக்க உதவ பொதுமக்களும் நிறுவனங்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதேபோல மாநில வாரியாகவும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனது ஓராண்டு ஊதியத்தை வழங்குவதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இது குறித்து அவர், "இப்போது நாம் அனைவரும் மிகக் கடினமான சூழ்நிலையில் உள்ளோம். இந்தப் பெருந்தொற்றுநோயை ஒழிக்க நாம் ஒன்றாக எதிர்த்துப் போராடுவது அவசியம்.