கர்நாடகா சட்டப்பேரவையில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
இதனிடையே, 105 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக ஆட்சியமைப்பது குறித்து மௌனம் காத்து வந்த நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா இன்று காலை ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர், எடியூரப்பாவை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
அதனை தொடர்ந்து, இன்று மாலை 6.30 மணிக்கு ராஜ்பவனில் ஆளுநர் முன்னிலையில் பி.எஸ். எடியூரப்பா, நான்காவது முறையாக கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.