தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகத்தில் விரைவில் தாமரை மலரும் - எடியூரப்பா - பாஜக

பெங்களூரூ: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி கவிழ்ந்ததும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

yeddyurappa

By

Published : Jul 8, 2019, 11:07 PM IST

கர்நாடகாவில் 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைத்த மதச்சார்பற்ற ஜனதா தள அரசு தற்போது பெரும் குழப்பங்களைச் சந்தித்து வருகிறது.

சுயேட்சை எம்எல்ஏக்கள் இருவர் ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில், கர்நாடக அரசு தற்போது சீராக நடைபெறுவதாகக் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஏற்கனவே இரண்டு சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளதாகவும் தற்போது பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெரும்பான்மையை இழந்த பின்னரும் குமாரசாமி இப்படிப் பேசி வருகிறார் எனவும் மக்கள் இது எல்லாவற்றையும் பார்த்து வருவதாகவும் அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details