2019-2020 ஆம் நிதியாண்டில் அரசாங்கத்தின் வரி வசூல் அதன் மதிப்பீட்டிலிருந்து ரூ. 2.5 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளது என்ற செய்தி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், 'இது வெறுமனே பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பது அல்ல. இது மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை அழிப்பதாகும். அதே நேரத்தில் மோடியின் பணக்காரக் கூட்டாளிகள் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து நிதியளிக்கின்றனர். தெருக்களில் உள்ள மக்கள் கவனத்தில் கொள்கின்றனர். இவைகள் சரி செய்யப்படும்' எனக் கூறியிருந்தார்.