2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தது. பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் தனது கருத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் கே.சி வேணுகோபால், ஆறாண்டு கால மோடி ஆட்சி நாட்டில், அன்பை, சகோரதரத்துவத்தை வளர்க்காமல், பிரிவினைவாதத்தையும், மதவெறியையும்தான் அதிகரித்துள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக அரசின் குறைகளை முறையாகச் சுட்டிக்காட்டிவருகிறோம் என்றார்.