தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யஷ்வந்த் சின்ஹா குழு ஸ்ரீநகரை விட்டு வெளியேற தடை - நடப்பது என்ன? - ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம்

ஸ்ரீநகர்: பாஜக முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா ​​தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினரை ஸ்ரீநகரை விட்டு வெளியேற காவலர்கள் தடுத்துவிட்டனர்.

Yashwant Sinha-led group barred from moving out of Srinagar

By

Published : Nov 24, 2019, 7:04 PM IST

வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் சின்ஹா, நவம்பர் 22ஆம் தேதியன்று தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லாவுடன் தொலைபேசியில் பேசினார். அதன் பின்னர் ஈடிவி பாரத்துக்கு பேட்டியளித்த அவர், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம் ஒரு தவறான நடவடிக்கை என்று கருத்து தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அவர், தெற்கு காஷ்மீரில் புல்வாமா மற்றும் ஷோபியான் ஆகிய பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் தெற்கு காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தலைக் காரணம் காட்டி காவல் அலுவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சின்ஹா, ‘நாங்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, யூசுப் தரிகாமி ஆகியோரை பார்ப்பதற்கு அனுமதி கோரி துணை ஆணையருக்கு எழுத்துப்பூர்வ தகவல் அனுப்பியிருந்தோம். எனினும் அனுமதி வழங்கப்படவில்லை. இது விதிமீறலாகும். எங்கள் குழு ஆய்வு நடத்துவதை முடக்கும் செயலாகும்’ என்று கூறினார்.

காவல் அலுவலர்கள், உங்கள் பாதுகாப்பை பாதிக்கும் எந்தவொரு பயணத்தையும் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாகவும் சின்ஹா கூறினார். இந்த குழு ஸ்ரீநகரில் இருந்து நாளை (நவ.25) டெல்லி திரும்ப உள்ளது.

இதையும் படிங்க: அரசியலமைப்பில் முக்கிய பங்காற்றிய சின்ஹா யார்?

ABOUT THE AUTHOR

...view details