நவம்பர் 2ஆம் தேதி யமுனா நதியில் நடந்த சத் பூஜையின்போது ஆற்றுப் படுகையில் ரசாயன நுரை மலைபோல் காட்சியளித்தது. இதில் இறங்கி பக்தர்கள் நீராடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி கேள்விக்குள்ளானது. இதனையடுத்து மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இவ்விவகாரம் குறித்துத் தெளிவான அறிக்கை அளிக்கும்படி கோரியுள்ளது.
தலைநகரில் அபாயகரமான அளவைத் தாண்டி காற்று மாசுபட்டுள்ளது. இயல்பு நிலையைத் தாண்டி, காற்று மாசின் குறியீட்டின் அளவு 1000 புள்ளிகளை சில தினங்களுக்கு முன் தாண்டிச் சென்றது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்து விவசாயக் கழிவுகளை எரிப்பது, புதிய கட்டுமானங்கள் உள்ளிட்டவை அதீத காற்று மாசுக்குக் காரணமாகக் கூறப்பட்டுவருகிறது.