தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லட்சக்கணக்கான N95 முகக்கவசங்களை வழங்கிய சியோமி! - சியோமி நிறுவனம்

சியோமி செல்போன் தயாரிப்பு நிறுவனம் டெல்லி, பஞ்சாப், கர்நாடக மாநிலங்களுக்கு லட்சக்கணக்கான N95 முகக்கவசங்களை வழங்கியுள்ளது.

xiaomi
xiaomi

By

Published : Mar 23, 2020, 10:10 PM IST

கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு அவசர கால தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவருகின்றன. சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி டெல்லி, பஞ்சாப், கர்நாடக மாநிலங்களுக்கு லட்சக்கணக்கான N95 ரக முகக்கவசங்களை வழங்கியுள்ளது.

அதுகுறித்து சியோமி நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநரான மனு ஜெயின் கூறுகையில், சியோமி சார்பாக லட்சக்கணக்கான N95 முகக்கவசங்களை டெல்லி, பஞ்சாப், கர்நாடக மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ், அப்பல்லோ, அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றார். மக்கள் அனைவரும் கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கூட்டமாகக் கூடுவதை தவிர்க்கவும் அவர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க:'புதியதாக உற்பத்தி செய்யும் முக கவசம் பயன்பாட்டுக்கு வரும் போது விலை குறைக்கப்படும்'

ABOUT THE AUTHOR

...view details