1989 மார்ச் 12ஆம் தேதியன்று, 39 வயதான சார் டிம் பெர்னெர்ஸ் லீ, தனது அலுவலக முதலாளியிடம் தகவல் மேலாண்மை குறித்த திட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தார். அது இணைய உலகை மாற்றியமைக்கும் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.
சார் டிம் பெர்னெர்ஸ் லீ சமர்ப்பித்த அந்த திட்ட ஆவணம் சோதனை முதலில் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. பின்னர், அது பொதுப் பயன்பாட்டுக்காக 1993ஆம் ஆண்டு இணைய வலைப்பின்னல் அமைப்பாக வெளிவந்தது.