இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று ஆற்றிய உரையோடு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை பற்றி கூறுகையில், உலகின் பல்வேறு தலைவர்களைச் சந்திப்பதற்கு பெரும் வாய்ப்பாக இருந்தது. நாம் வாழும் இந்த உலகத்தை அமைதியாக மாற்றுவதற்கு இந்தியா தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும். சுகாதாரத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி, பருவநிலை மாற்றமடையாமல் பாதுகாத்தல், பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் அனைவரையும் ஒன்றிணைப்பது அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.