தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிகரித்த பெட்ரோல், டீசல் தேவை... இயல்பு நிலைக்கு திரும்பியதா எண்ணெய் நிறுவனங்கள்? - இயல்பு நிலைக்கு திரும்பிய எண்ணெய் நிறுவனங்கள்

டெல்லி: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து 21 நாள்கள் ஏற்றப்பட்டதால், எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் சீரான நிலைக்கு திரும்பியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

worst-over-petrol-diesel-demand-reach-89-percent-of-normal-in-may-june
worst-over-petrol-diesel-demand-reach-89-percent-of-normal-in-may-june

By

Published : Jun 28, 2020, 4:22 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்தது. இதனால் அவற்றின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் மார்ச் 16ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் ஜூன் 7ஆம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து 21 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தே காணப்பட்டது. இந்த 21 நாள்களில் லிட்டருக்கு 9 முதல் 10 ரூபாய் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.

இந்நிலையில் ஐசிஐசிஐ டைரக்ட் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில், ''எண்ணெய் நிறுவனங்களின் நிலைகள் மீண்டும் சீரான தன்மைக்கு திரும்பியுள்ளன. எண்ணெய் நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் விலையும், விற்பனை செய்யும் விலையும் பெரும் மாற்றத்தில் இருக்க வேண்டும் என்பதில் எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருந்தன. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் தேவை 85 முதல் 89 விழுக்காடாக உள்ளது.

2018 நிதியாண்டில் கச்சா எண்ணெய் பேரலின் விலை 8.5 டாலராகவும், 2020 நிதியாண்டில் 0.1 டாலராகவும் மதிப்பிடப்பட்டிருந்தது. 2021 மற்றும் 2022 ஆகிய நிதியாண்டுகளில் கச்சா எண்ணெய் பேரல் விலையை 4 டாலராக உறுதிப்படுத்த வேண்டும்'' என ஆலோசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனாவால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஐஸ் க்ரீம் தொழில்

ABOUT THE AUTHOR

...view details