தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள அரசின் உதவியை நாடும் மகாராஷ்டிரா - கேரளாவை நாடும் மகாராஷ்டிரா

மும்பை: கரோனா தொற்று அதிகரிக்கும் காரணத்தால் மகாராஷ்டிர அரசு, கேரள அரசிடம் உதவிகோரி அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பியுள்ளது.

கேரளாவை நாடும் மகாராஷ்டிரா
கேரளாவை நாடும் மகாராஷ்டிரா

By

Published : May 25, 2020, 5:29 PM IST

மும்பை, புனே தொழில்துறை வணிகப் பிரிவில், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவிகோரி, மகாராஷ்டிரா அரசு கேரள அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சர் ராஜேஸ் டோப், கேரள சுகாதார அமைச்சர் கே. கே. சைலஜாவிடம் கரோனாவை எதிர்கொள்வது குறித்துப் பேசியுள்ளார்.

தற்போது கரோனா அச்சுறுத்தலைச் சமாளிக்க எங்களுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் தேவை என்று அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை மகாராஷ்டிர அரசு அனுப்பியுள்ளது. இக்கடிதத்தை மகாராஷ்டிரா கரோனா நோடல் அதிகாரியாக இருக்கும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் டி.பி. லஹானே எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியதாவது; ’மும்பை, புனேவில் பின்வரும் காலங்களில் கரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் மகாராஷ்டிரா சுகாதார அலுவலர்களுக்கு உதவ சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழு தேவை.

அவர்களின் சேவைகளுக்காக, எம்.பி.பி.எஸ் மருத்துவர்களுக்கு மாதத்திற்கு ரூ.80,000, எம்.டி, எம்.எஸ் சிறப்பு மருத்துவர்களுக்கு மாதத்திற்கு ரூ.2 லட்சம் வழங்க மகாராஷ்டிரா தயாராக உள்ளது. இதில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு மாதம் ரூ.30,000 மாநில அரசு ஊதியமாக வழங்கும்.

அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தங்குமிடம், உணவு, தேவையான மருந்து, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் மகாராஷ்டிரா அரசு வழங்கும்.

கரோனா தொற்று வளர்ந்து வரும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, மும்பை நகரில் உள்ள மகாலட்சுமி ரேஸ் கோர்ஸில் 600 படுக்கைகள் கொண்ட கோவிட் கரோனா மையத்தை அமைக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இதில் 125 தீவிர சிகிச்சைப் படுக்கைகளும் உள்ளன' என்று கூறினார்.

தனியார் மருத்துவப் பயிற்சியாளர்களின் சேவையையும் அரசு வழங்கியுள்ளது, ஆனால் இன்னும் பல மருத்துவர்கள், செவிலியர்களின் சேவை தேவைப்படுகிறது. அதனால் அவர்களின் தேவையை நாடியுள்ளோம் என்று டாக்டர் டி.பி. லஹானே கூறினார்.

இதையும் படிங்க: மக்களோடு மக்களாக இணைந்த ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details