லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் எனப்படும் இந்திய - சீன எல்லைப்பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரும் திரண்டுள்ளதால் மோதல் போக்கு நிலவிவருகிறது. ஊடகங்கள் வெளியிடும் தகவலின்படி, சீனா சுமார் 4,000 துருப்புகள் மற்றும் கனரக உபகரணங்களை அணி திரட்டி நிறுத்தியுள்ளது. இதுபோன்ற ஒருங்கிணைந்த ஊடுருவல்கள் சீனாவின் தலைமையின் அனுமதி இல்லாமல் நடந்திருக்க முடியாது. வூஹான் மற்றும் மகாபலிபுரம் முறைசாரா உச்சி மாநாட்டு நடத்தப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் வலுப்படுத்தப்பட்டது. அப்படியிருக்கு இருதரப்பு புரிதலும் தற்போது சிக்கலாக மாறியுள்ளதன் பின்னணி என்ன?
தற்போது அது அனுபவிக்கும் உலகளாவிய அதிருப்தி போக்கு சீனாவுக்கு மிகவும் புதியது. 1918-20 ஸ்பானிஷ் காய்ச்சலுக்குப் பின்னர் மனிதகுலத்திற்குத் சந்திக்கும் கொடிய பெருந்தொற்றுநோயின் பிறப்பிடமாகத் தற்போது சீன கருதப்படுகிறது. வெளிநாட்டு மூலதனமும் தொழில்துறையும் அந்நாட்டை விட்டு வெளியேறுகின்றன. சீனா ஒரு சுயநல அரசு எனவும் மற்ற நாடுகளை ஏய்த்து குளிர்காயும் பெருஞ்சக்தி என்ற உலகளாவிய கருத்து தற்போது பலப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வீட்டோ அதிகாரம் உள்ள சீனா கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஏற்படும் அழிவைப் பற்றி விவாதிப்பதைத் தடுத்தது. ஆனால் உலக சுகாதார சபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைவுத் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலை சீனாவில் தவிர்க முடியவில்லை. ஆப்பிரிக்காவில் சுகாதார வசதிகளை அமைப்பதற்காக சுமார் 2 பில்லியன் டாலர் உதவியைச் செய்வதன் மூலம் அங்குதன் இருப்பை உயர்த்திக்கொள்ள சீனா தயரானது.
இதன் மூலம் உலக தலைமை என்ற போட்டியில் அமெரிக்காவுடன் சீனா போட்டிப்போட்டுவருகிறது. இந்த சூழலில்தான் கரோனா தாக்கம் சீனா மீதான வெறுப்பாக உலகநாடுகள் மத்தியில் பிரதிபலித்துவருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தத்திற்கு சீனவின் உள்ளாகியுள்ளதுடன். சீனாவிடம் இருந்து இரண்டு டிரில்லியன் டாலர்களுக்கு இழப்பீடு கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்க நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது. இதற்கு பதில் தரும் விதமாக சீனாவின் வெளியுறவு மந்திரி வாங்யி, அமெரிக்காவில் ஒரு அரசியல் வைரஸ் பரவி வருகிறது, அந்த வைரஸ் மூலம் சீனாவைத் தாக்கவும் தகர்க்கவும் ஒவ்வொரு வாய்ப்பையும் அமெரிக்கா தீவிரமாகப் பயன்படுத்துகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.