தசரா பண்டிகை நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி உலகின் மிக உயரமான ராவணன் சிலை பஞ்சாப் மாநிலம் சண்டிகரின் தனாஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கிட்டதட்ட 221 அடி உயரமுள்ள ராவணன் சிலை, ஆறு மாதங்களில் கட்டப்பட்டுள்ளது. இந்த சிலையை ராம்லீலா கிளப் அம்பாலாவைச் சேர்ந்த தேஜீந்தர் சவுகான் தலைமையிலான 40 தொழிலாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். ரூ. 30 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த சிலை 7,000 கிலோ எடையுடையது. இந்த ராவண சிலையின் காலணி ஒவ்வொன்றும் 40 அடி மற்றும் 2 கிலோகிராம் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.