இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அந்நாட்டின் மன்னரான சல்மான் பின் அப்துலாசிஸை அவர் சந்திக்கவுள்ளார். மகாராஷ்டிராவில் அமையவுள்ள உலகின் மிகப் பெரிய சுத்திகரிப்பு நிலையத்தின் ஒப்பந்தமானது இந்த பயணத்தின்போது இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் உலகின் மிகப் பெரிய சுத்திகரிப்பு நிலையம்!
ரியாத்: பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தின்போது, மகாராஷ்டிராவில் அமையவுள்ள உலகின் மிகப் பெரிய சுத்திகரிப்பு நிலையத்தின் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் அமையவுள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 3 லட்சம் கோடி செலவு செய்யவுள்ளன. சவுதி அரம்கோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபி தேசிய எண்ணெய் நிறுவனம், இந்திய நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்ற பல நிறுவனங்கள் இந்தத் திட்டத்திற்காக முதலீடு செய்யவுள்ளன.
இதையும் படிங்க: சவுதி அரேபியா புறப்பட்ட மோடி!