தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உற்பத்திக்கான வளர்ச்சியைவிட, மக்களின் மகிழ்ச்சிதான் முக்கியம்! - delhi deputy cm manish sisodia

டெல்லி: உள்நாட்டு மொத்த உற்பத்திக்கான வளர்ச்சியைவிட, மக்களின் மகிழ்ச்சிதான் மிகவும் முக்கியமானது என்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி

By

Published : Sep 6, 2019, 1:13 PM IST

Updated : Sep 6, 2019, 1:29 PM IST

டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா எழுதிய புத்தகமான ‘சிக்‌ஷா’ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குடியரசு முன்னாள்தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான குறியீடான உள்நாட்டு மொத்தஉற்பத்தியின் வளர்ச்சி மட்டுமே மிக முக்கியம் என்று உலகம் தற்போது கருதுவதில்லை.

‘சிக்‌ஷா’ புத்தக வெளியீட்டு விழா

அது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட நாட்டு மக்களின் மகிழ்ச்சியே மிகவும் முக்கியம் என்று உலகம் கருதுகிறது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்குக் கல்வியே அடித்தளம்” என்று கூறியுள்ளார். மேலும், புத்தகங்களின் தேவை குறித்துப் பேசியவர், மணீஷ் சிசோடியாவின் ‘சிக்‌ஷா’ புத்தகத்திற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Last Updated : Sep 6, 2019, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details