அருங்காட்சியங்கள் மனித இனத்தின் தொன்மை, வரலாறு, மரபுகள், கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் நோக்கில் அமைக்கப்பட்டவை. பன்னாட்டு அருங்காட்சியங்களின் கூட்டமைப்பு 1977ஆம் ஆண்டு முதல், மே 18ஆம் தேதியை சர்வதேச அருங்காட்சியக தினமாக அறிவித்தது.
புதுச்சேரியில் நடைபெற்ற பிராமி எழுத்துக்கள் கண்காட்சி - பிராமி எழுத்துக்கள்
புதுச்சேரி: சர்வதேச அருங்காட்சி தினத்தையொட்டி ரோமன் வீதியில் உள்ள அருங்காட்சியகத்தில் பிராமி எழுத்துக்கள் தொடர்பான கண்காட்சி தொடங்கப்பட்டது.
இதன்படி சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி ரோமன் வீதியிலுள்ள அருங்காட்சியகத்தில் பிராமி எழுத்துக்கள் தொடர்பான கண்காட்சி தொடங்கப்பட்டது. இதனை புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர் கணேசன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்தக் கண்காட்சியில், புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள அரிக்கமேடு பகுதியில் கிடைத்த கி.பி 18, 17ஆம் நூற்றாண்டில் புழங்கிய பழமை வாய்ந்த தாழிகள், மண்பாண்டங்கள், பலவிதமான கலர் கற்கள் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ் எழுத்துக்களைக் கல்வெட்டிலிருந்து வடிவம் எடுத்து அதனை சித்திரமாக வரைந்து அதற்குண்டான அர்த்தங்களை எழுதியும், பழங்கால வாணிப நகரமாக விளங்கிய அரிக்கமேடு பகுதியில் கிடைக்கப்பெற்ற உருக்குமணி, மண்பாண்ட சுடுமண் கலைப் பொருட்கள், பாத்திரங்கள், கலர் கற்கள் போன்றவையும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.