கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹம்பியில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற விருபாட்சர் கோயில். 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் தலைநகராக ஹம்பி இருந்தது. விருபாட்சர் கோயிலில் உள்ள பழமைவாய்ந்த சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளையும், பக்தர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த கோயில் வளாகத்தில் காணப்படும் விநாயகர் சிலை சாசிவே காலு கணபது என்று அழைக்கப்படுகிறது. சாசிவே காலு என்றால் கன்னடத்தில் கடுகு என்று பொருள். 8 அடி உயரம் கொண்ட இந்த விநாயகர் சிலை, திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளது. சிலையின் வயிறு பகுதி கடுகு விதை போல் இருப்பதாக கூறப்படுகிறது. ஹம்பியில் வியாபாரி ஒருவர் கடுகு விற்பனை செய்த பணத்தின் மூலம் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டதால், சாசிவே காலு என்று பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.