இங்கிலாந்து மான்செஸ்டரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை நடந்த உலகக் கோப்பைகளில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை என்ற சாதனை இந்த போட்டியின் மூலம் மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளது.
'பாகிஸ்தான் மீது மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்' -அமித் ஷா - india won
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதன் மூலம் 'இந்திய அணி மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியுள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அமித் ஷா
இந்நிலையில் இந்தியா வெற்றி பெற்றது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 'இந்தியா, பாகிஸ்தான் மீது மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியுள்ளது. இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் கவர்ந்துள்ளது' என பதிவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.