ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேச மாநிலம் 2014ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டதை அடுத்து பிளவுபட்ட ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டது. அந்நகரை சிங்கப்பூர் போல உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பல்வேறு திட்டங்களை அமல்படுத்திவந்தார். மேலும், பெருமளவிலான நிதியுதவியை மத்திய அரசு, உலக வங்கி ஆகிய அமைப்புகளிடம் கோரியிருந்தார்.
இந்நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தோல்வியுற்று புதிய முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்றார். புதிதாக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு அதிர்ச்சி அளிக்கு வகையில் உலகவங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.