ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி. சிந்து தங்கம் வென்று உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தார்.
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவரை பலரும் பாராட்டிவருகின்றனர். முன்னதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.