தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 12, 2020, 6:29 PM IST

ETV Bharat / bharat

எஸ்-400 ஏவுகணை: விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கிறது ரஷ்யா!

டெல்லி: எஸ் -400 ரக ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்குவதற்கு "மிகவும் கடினமாக" செயல்பட்டுவருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

எஸ்-400 ஏவுகணை: விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கும் முணைப்பில் ரஷ்யா
எஸ்-400 ஏவுகணை: விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கும் முணைப்பில் ரஷ்யா

காணொலி வாயிலாக நடைபெற்ற ஊடக மாநாட்டில், கலந்துகொண்டு ரஷ்ய மிஷனின் துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின் உரையாற்றினார். அப்போது, "இந்தியா-ரஷ்யா இரு நாடுகளும் பரஸ்பர தளவாடங்கள் ஆதரவு ஒப்பந்தத்தில் செயல்பட்டுவருகின்றன.

மேலும், பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தைக் கையெழுத்திடவும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்தோ-ரஷ்ய கூட்டு முயற்சியின்கீழ் உருவாகிவரும் 200 காமோவ் கா-226 டி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (பெக்கா) இந்திய ரஷ்ய உறவை பாதிக்காது.

இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் ராணுவத்தினரிடையே உயர்தர ராணுவ தொழில்நுட்பம், புவியியல் வரைபடங்கள் மற்றும் வகைப்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான முக்கிய அடையாளமான BECA ஒப்பந்தத்தில் கடந்த மாதம் கையெழுத்திட்டன.

எஸ்-400 ஒப்பந்தத்தின் அடிப்படையில், அதன் முதல் தொகுதி 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் முன்னதாகவே வழங்க நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் ஐந்து யூனிட்களை வாங்க 2018ஆம் ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவுடன் 5 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

கடந்தாண்டு, ஏவுகணை அமைப்புகளுக்காக இந்தியா சுமார் 800 மில்லியன் அமெரிக்க டாலர்களை ரஷ்யாவிற்குச் செலுத்தியது. எஸ்-400 ஏவுகணை ரஷ்யாவின் மிக முன்னேறிய நீண்ட தூர மேற்பரப்பில் இருந்து வான்வழித் தாக்கும் ஏவுகணை என்று அழைக்கப்படுகிறது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் பயணம் செய்தபோது, ​​இந்தியாவும் ரஷ்யாவும் ஏ.கே.-203 துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதிசெய்தன. பரஸ்பர தளவாடங்கள் ஆதரவு ஒப்பந்தத்தில் (எம்.எல்.எஸ்.ஏ), இரு நாடுகளுக்கும், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த இது உதவும்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகியவற்றுடன் இந்தியா ஏற்கனவே இதேபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி கண்காட்சியாகக் கருதப்படும் ஏரோ-இந்தியாவில் ரஷ்யா தனது மிகப்பெரிய பங்களிப்பை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று பாபுஷ்கின் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details