புதுச்சேரி சுதேசி மில் அருகில் தர்ணா போராட்டத்தை அவர்கள் நடத்தினர். இதில், இபிஎஃப், கிராஜுவிட்டி, ஓய்வூதியம் கிடைக்காமல் புதுச்சேரியில் மில் தொழிலாளர்கள், அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் வகையில், கருப்பு பேட்ஜ் அணிந்து மே தினத்தை அனுசரித்தனர்.
மே தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கும் ஊழியர்கள்! - புதுச்சேரி
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து மே தினத்தை அனுசரித்தனர்.
மேலும், சுமார் 150 அரசு சார்பு நிறுவனங்கள் சார்ந்த தொழிலாளர்கள் ஆறு மாதங்கள் முதல் 96 மாதங்கள் வரை மாத சம்பளம் பெறாமல் உள்ளனர். இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
நிலுவைத் தொகைகள் உடனே கிடைத்து தொழிலாளர் நல் வாழ்வு வாழ புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.