தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடும்பத்தின் மூத்த பிள்ளைபோல் வேலை செய்தேன் - கெஜ்ரிவால் - டெல்லி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கெஜ்ரிவால்

டெல்லி: வீட்டிலுள்ள மூத்த மகனைப்போலவே வேலை செய்தேன் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை கூட்டத்தில் பேசியுள்ளார்.

Kejriwal in Delhi election campaign
Kejriwal in Delhi election campaign

By

Published : Jan 22, 2020, 11:20 PM IST

டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சியினரும் சுறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று பத்லி தொகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்களிடையே பேசியபோது,"கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லிவாசிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்தோம்.

குடிநீரையும், மின்சாரத்தையும் இலவசமாக வழங்கினோம். கல்வியிலும் சுகாதாரத்திலும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால் 70 ஆண்டுகளாக செய்யவேண்டிய பணிகளை வெறும் ஐந்து ஆண்டுகளில் செய்ய முடியாது. எனவே எங்களுக்கு இன்னும் கொஞ்சம் காலம் தேவை.

நான் உங்கள் வீட்டின் மூத்த மகன் போல பணியாற்றினேன். வீட்டின் மூத்த மகன்தான் பெரும்பாலான பொறுப்புகளை ஏற்பான், அனைவரையும் கவனித்துக்கொள்வான், எல்லா செலவுகளையும் நிர்வகிப்பான். நானும் அதைத்தான் செய்ய முயன்றேன்" என்றார்.

இதையும் படிங்க: டெல்லி முதலமைச்சருக்கு கருப்புக்கொடி!

ABOUT THE AUTHOR

...view details