உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, நேற்று(ஆக.2) நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமித் ஷா, அரசு மருத்துவமனையை தவிர்த்துவிட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதியானது இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
அமித் ஷாவின் இந்த செயல் குறித்து, திருவனந்தபுரம் மக்களவை தொகுதியின் உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து சசி தரூர் தனது ட்விட்டர் பக்த்தில், "அமித் ஷா, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, அவர் எய்ம்ஸ் செல்ல விரும்பவில்லை.
மாறாக அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அரசு நிறுவனங்கள் (மருத்துவனைகள்) மீதான பொது மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க சக்தி வாய்ந்த நபர்களின் ஆதரவு தேவை" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேற்று கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.