தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண்கள் தொழில் தொடங்க இதுவே சரியான தருணம் - நிதின் கட்கரி - நிதின் கட்கரி

டெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தைப் பயன்படுத்தி பெண்கள் புதிய தொழில்கள் தொடங்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தியுள்ளார்

nitin about women
nitin about women

By

Published : Jun 27, 2020, 10:19 AM IST

நாட்டில் அதிகரித்துவரும் கரோனாவுக்கு மத்தியில், பொருளாதாரத்தினை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதிலும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குப் பல திட்டங்களைத் தொடர்ந்து அறிவித்துவருகிறது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இரண்டு லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மற்றொரு திட்டத்தினை தொடங்கியுள்ளார். அது 20,000 கோடி ரூபாய் கடன் உத்தரவாதத்தினை வழங்கும் திட்டமாகும்.

நேற்று காணொலி வாயிலாகப் பேசிய அவர், "பெண்கள் புது தொழில்முயற்சியில் ஈடுபட வேண்டும். கிராமத்தில் இருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி சிறு தொழில்கள் தொடங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நிலையான ஒரு தொழிலை கிராமப்புறங்களில் அமைக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கடத்தப்பட்ட 8 வயது சிறுமி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details