டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், அரசு மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் டெல்லியில் இயங்கும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கூடுதலாக பெண் காவலர்கள் (மார்ஷல்கள்) பணியமர்த்தப்படுவார்கள் என்றார்.
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பதற்காகவும் இம்மார்ஷல் பிரிவை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.