கரோனா பரவலை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் தங்களது வீட்டில் இருக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்திவருகின்றனர். அத்தியாவசிய பொருள்கள் வாங்க வெளியில் வரும்போது மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். இதனிடையே இன்று முதல் மே 17ஆம் தேதி புதுச்சேரியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் வருபவருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்
முதியவருக்கு முககவசம் அணிய கற்றுக்கொடுத்த காவலர்! - பெண் காவல் கண்காணிப்பாளர்
புதுச்சேரியில் முதியவர் ஒருவருக்கு முகக்கவசம் எவ்வாறு அணிய வேண்டும் என்று கற்றுக்கொடுத்த பெண் காவல் கண்காணிப்பாளரின் காணொலி சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி பெண் காவல் கண்காணிப்பாளர் ரட்ஷானா சிங் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றுக்கொண்டிருந்த முதியவர் ஒருவருக்கு முகக்கவசத்தை வழங்கி அதனை எவ்வாறு அணிவது என்பது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறி அந்த முதியவரை வழியனுப்பி வைத்தார். இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது. பெண் காவல் துறை அதிகாரியின் இந்த செயலை அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் பாராட்டியுள்ளார்.
இதையும் பார்க்க: கொளுத்துது கோடை வெயில்... தலைநகரில் தொடங்கியது தண்ணீர் தட்டுப்பாடு!