தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடி சமூக வலைதளங்களைக் கையாள குவியும் பெண்கள்! - பல பெண்கள் தங்களின் வாழ்க்கை முறை குறித்து #SheInspiresUs என்ற ஹேஸ்டேக்கில் குறிப்பிட்டுவருகின்றனர்

டெல்லி: பிரதமர் மோடி தன்னுடைய சமூக வலைதளங்களைக் கையாள விரும்பும் பெண்கள் தெரிவியுங்கள் என்று ட்விட்டரில் அவர் கூறியதையடுத்து அனைத்துத் துறையைச் சார்ந்த பெண்களின் என்ட்ரீஸ் குவிந்துவருகிறது.

மோடி
மோடி

By

Published : Mar 6, 2020, 10:00 AM IST

பிரதமர் மோடியின் சமூக வலைதளங்களைக் கையாள விருப்பம் தெரிவித்து பல துறையைச் சார்ந்த பெண்கள் #SheInspiresUs என்ற ஹேஸ்டேக் மூலம் தனது என்ட்ரீயை பதிவு செய்துவருகின்றனர்.

சமீபத்தில் பிரதமர் மோடியின் ட்வீட்டில் திடீர் புயலை ஒன்றை உருவாக்கியது. அந்தப் பதிவில், என்னுடைய அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் விட்டுக்கொடுக்க நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டார். இதையடுத்து, பல மக்கள் ஆதாரமாக அவருக்கு ட்வீட் செய்துவந்தனர்

அதன்பின்னர், இரண்டு நாள்கள் கழித்து பிரதமர் மோடியின் புதிய ட்வீட் அனைவரின் சந்தேகங்களையும் பூர்த்திசெய்துள்ளது. அதில், இந்த மகளிர் தினத்தில், எனது சமூக ஊடக கணக்குகளை மற்றவர்களுக்குப் பெரும் ஊக்கமளிக்கும் பெண்களுக்கு வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

கோடிக்கணக்கான மக்களுக்கு இது பெரும் உந்துதலாக இருக்கும். நீங்கள் அத்தகைய பெண்ணா அல்லது இதுபோன்ற எழுச்சியூட்டும் பெண்களை உங்களுக்குத் தெரியுமா? இது தொடர்பான தகவலை #SheInspiresUs என்ற ஹேஷ்டேக் மூலம் எங்களுடன் பகிருங்கள்" எனப் பதிவிட்டார்.

இதையடுத்து, தற்போது பல பெண்கள் தங்களின் வாழ்க்கை முறை குறித்து #SheInspiresUs என்ற ஹேஸ்டேக்கில் குறிப்பிட்டுவருகின்றனர். பிரதமர் மோடியின் சமூக கண்குகளைக் கையாளப்போகும் அதிர்ஷ்டகார பெண் யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க:மோடி வெளிநாட்டுப் பயணம் கொரோனாவால் ரத்து

ABOUT THE AUTHOR

...view details