இந்தப் போராட்டத்தில் ஒரு பெண் தனது நான்கு வயது குழந்தையுடன் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்தச் சட்டம் நாட்டின் அடிப்படை அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறினார். மேலும், "இந்தியாவை அழிக்க முயற்சிப்பவர்களின் கைகளில் நாடு உள்ளது. இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க முஸ்லிம் பெண்கள் நாங்கள் எங்கள் முகத்திரையை எடுத்து வீதிகளில் இறங்க வேண்டும்" என்றார்.
மற்றொரு பெண், "பாசிச சக்திகளிடமிருந்து நம் நாட்டைப் பாதுகாக்கும் சக்தியை கடவுள் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார், நாங்கள் கடைசிவரை போராடுவோம்" என்று கூறினார். உத்தரப் பிரதேச தலைநகரின் பாரம்பரிய பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடந்த பல நாட்களாக சிஏஏ (CAA) மற்றும் என்.ஆர்.சி (NRC) க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.