கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் மானசா(17). 12ஆம் வகுப்பு பயிலும் இவர், தந்தை சித்தாயா, தாய் ராஜேஸ்வரி(43) மற்றும் தங்கை பூமிகா(15) ஆகியோருடன் வசித்துவந்துள்ளார். ராஜேஸ்வரிக்கும் சித்தாயாவுக்கும் திருமணம் ஆகி 18 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில், சித்தாயா கடந்த மூன்று வருடங்களாக வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தது மானசாவிற்கு தெரியவந்தது. மேலும், வீட்டில் அடிக்கடி ராஜேஸ்வரிக்கும் சித்தாயாவுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தாய், மகள்கள் தற்கொலை! - வைரல்
பெங்களூரு: தனது தந்தை தவறானவர் என்று வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தாய் மற்றும் தங்கையுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
![வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தாய், மகள்கள் தற்கொலை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4126323-thumbnail-3x2-suicide.jpg)
இதனால் மனமுடைந்த மாணவி மானசா, தனது தந்தை எங்களை ஏமாற்றிவிட்டார். தங்களது வாழ்வை சிதைத்துவிட்டார். தங்களது மரணத்திற்கும் தந்தைதான் காரணம் என வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனைப் பார்த்த ராஜேஸ்வரியின் சகோதரர் புட்டாசாமி ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்தபோது மானசா, ராஜேஸ்வரி, பூமிகா ஆகிய மூவரும் தூக்கில் தொங்கியுள்ளனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த புட்டாசாமி காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீநகர் காவலர்கள் மூவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதன்பின்னர் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.