உத்தரப் பிரேதசம் மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள சேப்ஃதாபாத் பகுதியில் கேட்பாரற்று பெட்டியும் நெகிழி பையும் கிடந்தது.
இரண்டு நாள்களான நிலையில் அதில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், பெட்டி, நெகிழி பையை திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது தலை, கை, கால்களை கொடூரமாக துண்டு துண்டாக வெட்டி போடப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.