உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகர் மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 9ஆக உயர்ந்துள்ளது. இதில் 47 வயது பெண் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் எந்த வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது கணவரும், குழந்தையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவரது வீட்டிற்கு அருகில் உள்ளவர்களும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அவர் தங்கியிருந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகள் இன்றி வெளியேறவோ, உள்ளே செல்லவோ அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் பி.என். சிங் கூறுகையில், “கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மார்ச் 24 முதல் 26 வரை பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
கரோனா தொற்று உறுதியான பெண்ணுக்கு வெளிநாட்டு பயணம் குறித்த தொடர்பு இல்லை என்றாலும், ஆடிட்டராக பணிபுரியும் அவரது கணவரை லண்டனைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது உத்தரப் பிரதேசத்தில் 33 கரோனா தொற்று பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க... கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை