பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து இரண்டாவது ஆண்டான 2015இல், “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வீடு வழங்கப்படுவதற்காகக் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் ”பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வீடுகள் தவறாக ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.