தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மௌலாலி ஆர்ச் அருகே, சாலை விதியை மீறி ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றுள்ளனர். அதனை அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறை அலுவலர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்.
காவலரை தாக்கிய டிஆர்எஸ் வார்டு உறுப்பினர் குடும்பத்துடன் கைது! - டிஆர்எஸ் வார்டு உறுப்பினர்
ஹைதராபாத்: சாலை விதியை மீறி இருசக்கர வாகனத்தில் ட்ரிபிள்ஸ் சென்றவர்களை, வீடியோ எடுத்த போக்குவரத்து காவலரை தாக்கிய குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![காவலரை தாக்கிய டிஆர்எஸ் வார்டு உறுப்பினர் குடும்பத்துடன் கைது!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3886888-thumbnail-3x2-attack.jpg)
இதை பார்த்துக்கொண்டே இருசக்ர வாகனத்தில் சென்றவர்கள், சிறுது நேரம் கழித்து, தன் அப்பா, அம்மா, மனைவி என மொத்த குடும்பத்தோடு சேர்ந்து வந்து, அந்த காவலரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு, மேலும் அவரை தாக்கிவிட்டு சென்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஹைதராபாத் காவல்துறையினர், அந்த ஒட்டுமொத்த குடும்பத்தையும் கைது செய்து நடத்திய விசாரணையில், போக்குவரத்து காவலரை தாக்கியது மௌலாலி வார்டு உறுப்பினர் பேகம், அவரது கணவர் சையத் கஃபர், இரு மகன்கள் மஜித், சாதிக், மருமகள் கவுஸ் என தெரியவந்துள்ளது.