தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகளைக் கொடூரமாகத் தாக்கும் தாய் - காவல் துறை நடவடிக்கை! - காவல்துறை அதிரடி நடவடிக்கை

கத்துவா: மகளைக் கொடூரமாகத் தாய் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதைத் தொடர்ந்து காவல் துறையினர் பெற்றோரைக் கைது செய்தனர்.

மகளைக் கொடூரமாகத் தாக்கும் தாயி

By

Published : Nov 19, 2019, 12:16 PM IST

சமூக வலைதளங்களில் பெண் ஒருவர் சிறுமியை இரக்கமின்றி அடிக்கும் காணொலி அதிகளவில் பகிரப்பட்டது. அதில், சிறுமியின் தலை முடியைப் பிடித்து இழுப்பதும், செருப்பைக் கொண்டு அடிக்கும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.

இச்சம்பவம் காவல்துறையினர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த காணொலி, கத்துவாவின் நாகரி பகுதியைச் சேர்ந்தது என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மகளைக் கொடூரமாகத் தாக்கும் தாய்

இதுகுறித்து டிஎஸ்பி மஜித் மெஹபூப் கூறுகையில்," காணொலியில் உள்ள பெண் தனது 5 வயது மகளை அடிக்கும் காட்சிகளை, அவளது தந்தை தான் ரகசியமாகப் படம் பிடித்துள்ளார். இதனையடுத்து குழந்தைகள் நலக்குழு அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறுதான் இச்சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: 4 நாய்க்குட்டிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற ஓட்டுநர் - விலங்குகள் காப்பகப் புகாரில் கைது!

ABOUT THE AUTHOR

...view details