தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மார்க்கெட் வளாகத்தில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை - கத்தியால் குத்திக்

மும்பை: மார்க்கெட் வளாகத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இளம் பெண் கத்தியால் குத்திக் கொலை

By

Published : Jul 6, 2019, 8:11 PM IST

மஹாராஷ்டிரா மாநிலம், தானே அருகே கல்யாண் பகுதியை சேர்ந்தவர் சனம் கரோதியா(22). இவர் கடந்த வியாழனன்று ஏபிஎம்சி மார்கெட் வளாகத்தில் தனது நண்பரை பார்ப்பதற்காக காத்திருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர், சனம் கரோதியாவினை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு வாகனத்தில் தப்பி சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சனம் கரோதியாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியை சோதனை செய்ததில் இரண்டு செல்போன்கள், அப்பெண்ணின் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றினர்.

இளம் பெண் கத்தியால் குத்திக் கொலை

மேலும், வீடியோ பதிவினை ஆதாரமாக கொண்டு, கொலை நடந்து ஒரு மணி நேரத்திற்குள் பாபு தாகானே எனும் நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details