தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கத்திலும் ஹைதராபாத் சம்பவம்! - பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - மேற்கு வங்கத்தில் பெண் கற்பழித்து எரித்துக் கொலை

கொல்கத்தா: தெலங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் கொல்லப்பட்டது போல் மேற்கு வங்கத்திலும் ஒரு பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Woman raped and burned in West Bengal
Woman raped and burned in West Bengal

By

Published : Dec 5, 2019, 5:07 PM IST

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்திலுள்ள ஒரு மாந்தோப்பில் பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் இன்று (டிச. 5) கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் இங்கிலீஸ்பஸார் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

அந்தப் பெண்ணின் உடல் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடலிலும் காயங்கள் உள்ளன. இதுதொடர்பாக காவல் அலுவலர் ஒருவர் கூறுகையில், “பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பதால், அவர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருக்கலாம்.

மேற்கு வங்கத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு எரித்துக் கொலை
அதன்பின்னர் அவரின் உடல் தீயிட்டு எரிக்கப்பட்டிருக்கலாம். இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

தெலங்கானா மாநிலம் சம்ஸாபாத் பகுதியில் கடந்த வாரம் பெண் கால்நடை மருத்துவர், நால்வரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு தீயிட்டு எரித்துக் கொல்லப்பட்டார். அந்தக் கொடூர சம்பவம் போன்று இந்தச் சம்பவமும் நடந்திருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details