தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரண்டு மகள்களைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்!

ஹரியானா: தன் இரண்டு மகள்களையும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற கொடூர சம்பவம் ஹிசார் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

இரண்டு மகள்களைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்!
இரண்டு மகள்களைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்!

By

Published : May 25, 2020, 6:24 PM IST

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அகமது, இவருக்கு சாரியா என்ற மனைவியும் மம்தா (3), கிரண் (1) என்ற இரண்டு மகள்களும் இருந்தனர். இவர்கள் கேதார் கிராமத்தில் உள்ள சேரிப்பகுதியில் வசித்துவந்தனர்.

இந்நிலையில், அகமது வேலைக்குச் சென்ற சமயத்தில் அவருடைய மனைவி சாரியா குழந்தைகளைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தொடர்ந்து தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். திடீரென அகமதுவின் வீட்டிலிருந்து சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்போது சாரியா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கிராமத்தினர் குழந்தைகளைத் தேடியபோது, அவர்களின் உடல்கள் அகமது வீட்டு படுக்கை அறையில் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து கிராமவாசிகள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தன் குழந்தைகளைக் கொலை செய்த காரணத்திற்காக தன் மனைவி மீது அகமது காவல் துறையில் புகாரளித்துள்ளார்.

இதையும் படிங்க:22 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்ற பெற்றோர் கைது!

ABOUT THE AUTHOR

...view details