உத்தரப் பிரதேசத்தில் சித்ரகூட் மாவட்டத்தில் சுர்வால் கிராமத்தில் உள்ள வீடுகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் பற்றி எரிய தொடங்கிய தீ மளமளவென அனைத்து வீடுகளுக்கும் பரவ தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை வீரர்கள் வருவதற்குள் அனைத்து வீடுகளும் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் 47 வீடுகள் தீயில் எரிந்து நாசம்... ஒருவர் உயிரிழப்பு! - Uttar Pradesh's Chitrakoot district fire accident
லக்னோ: சித்ரகூட் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 47 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன.
sd
இதுகுறித்து காவல் ஆய்வாளர் கூறுகையில், "ஒரு வீட்டில் எரிய தொடங்கிய தீயானது , தூசி புயல் காரணமாக விரைவாக மற்ற வீடுகளுக்கும் பரவியது. தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதில், லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுப் பொருள்கள் எரிக்கப்பட்டன. வருவாய் அலுவலர்கள் இழப்பை மதிப்பிட்டு வருகின்றனர். சுமார் 47 வீடுகள் தீ விபத்தில் ஏரிந்து நாசமாகியுள்ளன" என்றார்.
இதையும் படிங்க:தங்கையுடன் பேசியதால் அரிவாள் வெட்டு!