உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில், பெண்கள் சிலர் நிர்ப்பந்தத்தின்பேரில் கலந்துகொள்கின்றனர் என அம்மாநில காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து காவல் துறை உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அலிகரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்களில் சிலர், தங்கள் கணவனின் வற்புறுத்தல், நிர்ப்பந்தத்தின்பேரில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தனர்.
மேலும் சில பகுதிகளிலும் இதுபோன்று நடந்துள்ளது. இது பற்றி பெண் ஒருவர் தகவல் கொடுத்தார். அவரின் கணவரிடம் விசாரித்தபோது அவர் மறுத்தார். பெண்களைப் போராட்டத்தில் சேருமாறு நிர்பந்திக்கும் நபர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.