உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரின் ஹாஜிபுரா மொஹல்லாவில் வரதட்சணைக் கேட்டு தனது மருமகளை கொடுமை படுத்திவந்த மாமியார், கொடுமையின் உச்சகட்டமாக தனது மருமகளையும் அவரது கைக்குழந்தையையும் உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண், கைக்குழந்தை உயிரோடு எரிப்பு - மாமியார் வெறிச்செயல்! - பெண் மற்றும் கைக்குழந்தை உயிருடன் எரிப்பு
உத்தரப் பிரதேசம்: ராம்பூரின் ஹாஜிபுரா மொஹல்லாவில் வரதட்சணைக் கொடுமையின் உச்சகட்டமாக, மாமியார் தனது மருமகளையும் அவரது கைக்குழந்தையையும் உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துப் பேசிய இறந்த பெண்ணின் சகோதரர் முகமது ஜாவேத், தனது சகோதரிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும், அவருக்கு 3 வயதில் மகனும், 3 மாத பெண் குழந்தையும் இருந்ததாகக் கூறினார். வரதட்சணை கேட்டு அவரது மாமியார் கொடுமைப் படுத்தியதையடுத்து தனது சகோதரி பிறந்த வீட்டில் வசித்து வந்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில், தனது சகோதரியையும் அவரது கைக்குழந்தையையும் மாமியார் நேற்று அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று உயிருடன் எரித்துள்ளார் என்று கூறினார். மேலும் இதுதொடர்பாக ஜாவேத் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.