தெலங்கானா மாநிலம் லிங்கம்பள்ளியில் இருந்து ஒடிசா மாநிலம் பலங்கிருக்கு 'ஷ்ராமிக் ஸ்பெஷல்' ரயில், பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று (ஜூன் 5) காலை புறப்பட்டது.
அந்த ரயிலில் மீனா கும்பர் (19) என்ற கர்ப்பிணி பயணம் செய்தார். அப்போது, அவருக்கு திடீரென பிரவசவ வலி ஏற்பட்டு ஓடும் ரயிலிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
இது குறித்து ரயில்வே துறை அலுவலர் கூறுகையில், "கிழக்கு கடற்கரை ரயில்வே அதிகார வரம்பில் உள்ள ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் பிறந்த மூன்றாவது ஆண் குழந்தை இது. தற்போது தாயும் சேயும், டிட்லாகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மீனா கும்பர், பாலங்கிரில் உள்ள தோடி பஹால் கிராமத்தைச் சேர்ந்தவர்.
இந்த குழந்தை உள்பட 37 குழந்தைகள் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பிறந்துள்ளன" எனத் தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் ரயில் பயணிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.