பெங்களூரு:கர்நாடக மாநிலம் சந்திரா லே-அவுட், அருந்ததி நகரில் வசித்துவருபவர் பாத்திமா. 30 வயதான இவர், வளைகுடா நாடுகளில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார்.
கரோனா ஊரடங்கால் நாடு திரும்பிய அவர், தான் அனுப்பிய பணம் அனைத்தையும், தனது தாய், சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோர் முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர். இதனால் தனது மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
தற்கொலைக்கு முயன்றவரின் வீடியோ பதிவு ஆனால், காவல் துறையினர் இவரது புகாரை விசாரிக்க அலட்சியம் காட்டியதால் மனமுடைந்த அவர், தனது மகனுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதுமட்டுமின்றி, தன்னுடைய தற்கொலைக்கான காரணத்தையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பாத்திமா மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையும் படிங்க:துரிதமாக செயல்பட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரை மீட்ட காவல்துறை!